/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காவலாளியை கழுத்தறுத்து கொல்ல முயற்சித்த கும்பலுக்கு போலீஸ் வலை
/
காவலாளியை கழுத்தறுத்து கொல்ல முயற்சித்த கும்பலுக்கு போலீஸ் வலை
காவலாளியை கழுத்தறுத்து கொல்ல முயற்சித்த கும்பலுக்கு போலீஸ் வலை
காவலாளியை கழுத்தறுத்து கொல்ல முயற்சித்த கும்பலுக்கு போலீஸ் வலை
ADDED : ஆக 05, 2024 02:22 AM
ஓசூர், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே குட்லப்பள்ளியை சேர்ந்தவர் சீனப்பா, 50; அப்பகுதியிலுள்ள பெங்களூருவை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான, 3.75 ஏக்கர் பரப்பளவில் உள்ள எஸ்டேட்டிற்கு காவலாளியாக உள்ளார்; நேற்று காலை, 8:00 மணிக்கு பணியிலிருந்த போது, 5 பேர் கொண்ட கும்பல் அவரது அறைக்கு சென்றது. அங்கிருந்த சீனப்பாவை தாக்கி, கத்தியால் கழுத்தை வெட்டிய கும்பல், அங்கிருந்து தப்பியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறிது தொலைவிலுள்ள சாலைக்கு நடந்து வந்த சீனப்பா மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பாகலுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அவ்வழியாக வந்த வாகனத்தில் ஏற்றி, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சீனப்பாவை சிகிச்சைக்கு அனுப்பினர்.
ஓசூர் டி.எஸ்.பி., பாபுபிரசாந்த் விசாரணை நடத்தினார். ரத்தம் அதிகம் வெளியேறி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சீனப்பாவிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாகலுார் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து, மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், 'கடந்த சில மாதங்களுக்கு முன் வரை, கர்நாடகா மதுபானங்களை சீனப்பா விற்பனை செய்து வந்துள்ளார். அதன் பின் திருந்தி காவலாளியாக வேலை செய்கிறார். அவரது மகன் வெங்கடேஷ், 21, அடிக்கடி தன் தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அதனால், அவரிடமும் விசாரித்து வருகிறோம். எதற்காக சம்பவம் நடந்தது, குற்றவாளிகள் யார் என்பது விசாரணையில் தான் தெரியவரும். துண்டால் முகத்தை மூடியபடி வந்த மர்ம கும்பல் அவரை கழுத்தில் வெட்டியுள்ளது' என்றனர்.