ADDED : ஆக 18, 2024 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வி.சி., கட்சி கிருஷ்-ணகிரி சட்டசபை தொகுதி சார்பில் திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி செயலாளர் தியாகு தலைமை வகித்தார். மண்டல துணைச் செய-லாளர் மின்னல் சக்தி, மாவட்ட பொருளாளர் முனி ராவ், துணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் கனியமுதன் நிர்வாகிகள் உள்ளிட்டோர், திருமாவள-வனின், 62வது பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி இனிப்பு வழங்கினர். தொடர்ந்து, 500 ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்-தகங்கள் வழங்கினர்.