/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு
/
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு
ADDED : ஆக 30, 2024 04:39 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வரைவு ஓட்-டுச்சாவடி பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்ட-ருமான சரயு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமு-கர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.
பின்னர், அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும், 2025 ஜன., 1ம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்-கமுறை திருத்தப்பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்ட-மாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 1,883 ஓட்டுச்சாவடிகளில், 100 சதவீத களப்பணி மேற்கொள்ளப்பட்டு, தற்போது, 1,896-க்கான வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்-ளது. இதில், 1,500 வாக்காளர்களுக்கு மேற்பட்ட ஓட்டுச்சாவடி-களை பிரித்து, 13 புதிய ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்-ளன. மேலும், பழுதடைந்த, 12 ஓட்டுச்சாவடி கட்டடங்களுக்கு பதிலாக, புதிய கட்டடங்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது.வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் தொடர்பாக, ஏதேனும் ஆட்சே-பனைகள் மற்றும் மேல்முறையீடுகள் இருப்பின், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடமோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்திலோ வரும், 6ம் தேதிக்குள் தகவல் அளிக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு, கிருஷ்ணகிரி நக-ராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிர-திநிதிகள் கலந்து கொண்டனர்.