/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
/
எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
ADDED : மே 01, 2024 02:30 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், சூளகிரி அடுத்த ராமன்தொட்டி கிராமத்தில், எருது விடும் விழா
நேற்று நடந்தது. சூளகிரி, உத்தனப்பள்ளி, பேரிகை, பாகலுார்
சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து
நுாற்றுக்கணக்கான காளைகள் வந்திருந்தன.
ஓசூர் தி.மு.க., -
எம்.எல்.ஏ., பிரகாஷ், விழாவை துவக்கி வைத்தார். விழா திடலில் ஒவ்வொரு
காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை அடக்கி, அதன் கொம்பில்
கட்டப்பட்டிருந்த தடுக்குகளை இளைஞர்கள் எடுத்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் நாகேஷ், கருணாகரன், இளைஞரணி மாநில துணை செயலாளர்
சீனிவாசன், ஓசூர் பகுதி செயலாளர் திம்மராஜ் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.