/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உலக நன்மை வேண்டி ராம கோடி ஜபயக்ன விழா
/
உலக நன்மை வேண்டி ராம கோடி ஜபயக்ன விழா
ADDED : ஆக 09, 2024 03:19 AM
ஓசூர்: உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டியும், இயற்கை சீற்-றங்கள் குறையவும், பாகலுார் அருகே ஈச்சங்கூர் கேட் பகுதியி-லுள்ள தனியார் மண்டபத்தில், ராமகோடி ஜபயக்ன மகோத்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. ஓசூர் அருகே, பாகலுார் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் சார்பில் நடக்கும் இந்நிகழ்ச்சி வரும், 21 ம் தேதி வரை, 15 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
முதல் நாளில் பெண்கள் கலசங்களில் புனிதநீர் கொண்டு சென்று, சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபி-ஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின், 'ஸ்ரீராம் ஜெயராம், ஜெய ஜெய ராம்' என்ற மந்திரங்கள் ஓதும் நிகழ்ச்சி துவங்கியது. இந்த ஒரே மந்திர உச்சரிப்பு வரும், 15 நாட்களும் நடக்கிறது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த ஆன்மிகவாதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர். விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.