/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தாமதமாக திறந்ததால் ரேஷன் கடை முற்றுகை
/
தாமதமாக திறந்ததால் ரேஷன் கடை முற்றுகை
ADDED : மே 25, 2024 02:44 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, தாதம்பட்டி பஞ்., மாவத்துார் பகுதியில், பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. மாவத்துார், மேல்செங்கம்பட்டி, கீழ்செங்கம்பட்டி, கோர்லப்பட்டி, அப்பாவு நகர் பகுதிகளை சேர்ந்த, 350 கார்டுகளுக்கு இங்குள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு கிழமைகளில் திறக்கப்படும் கடையில் நேற்று வழக்கம்போல், 100க்கும் மேற்பட்டோர் காலை, 9:00 மணி முதல் ரேஷன் பொருட்களை வாங்க வந்திருந்தனர்.
ஆனால் மதியம், 12:00 மணிக்குதான் கடை விற்பனையாளர் வந்தார். அங்கு கூடியிருந்த மக்கள் கடையை முற்றுகையிட்டனர். போச்சம்பள்ளி டி.எஸ்.ஓ., லதா, அங்கிருந்த மக்களிடம் சமரசம் செய்து, இனிமேல் முறையாக ரேஷன் கடை திறந்து, பொருட்கள் வழங்கப்படும் என, உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.

