/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை
/
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை
ADDED : ஆக 19, 2024 12:31 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு பஸ் டிப்போவில் இருந்து, புலியூர் கூட்ரோடு, ஒட்டப்பட்டி கூட்ரோடு, சாம்பல் பட்டி, நகரம், சின்ன கேட், பெரிய கேட், கல்லாவி வழியாக, இனாம் காட்டுப்பட்டி, ஆனந்துார், திருவனப்பட்டி வரை சென்று வந்த அரசு பஸ்கள், எண் யு 6, யு 15, கொரோனா கால-கட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு தற்போது வரை அந்த பஸ்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக-ளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க-வில்லை.
இந்த அரசு பஸ்களில், அரசு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் சென்று வந்தனர். தற்போது, அந்த அரசு பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவியர், பொதுமக்கள் மிகவும் சிர-மப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் நடந்த, 'மக்களுடன் முதல்வர்' முகாமில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புலம்பி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.