/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
3 ஆண்டுகளுக்கு பின் வறண்ட நதிகள் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து பாதிப்பு

ADDED : மார் 24, 2024 01:30 AM
கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி அருகே, மார்க்கண்டேயன் மற்றும் குப்தா நதிகள் நீர்வரத்தின்றி கடந்த, 3 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டதால், சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே ஓடும் மார்க்கண்டேயன் நதி மற்றும் குப்தா நதிகள், அப்பகுதி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. கர்நாடகா மாநிலத்திலிருந்து வரும், 2 ஆறுகளும் கடந்த, 2019ல் பெய்த கனமழையால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, 3 ஆண்டுகளாக, ஆற்றில் நீர்வரத்து இருந்த நிலையில், பின்னர் படிப்படியாக குறைந்ததால், மார்க்கண்டேயன் மற்றும் குப்தா நதிகள் நீரின்றி வறண்டதால், விவசாயத்திற்கும், குடி
நீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் போதிய மழையின்றி, வேப்பனஹள்ளி சுற்றுவட்டாரத்திலுள்ள ஏரி, குளங்களும் நீரின்றி காய்ந்துள்ளதால், அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. மார்க்கண்டேயன் நதியின் குறுக்கே, கர்நாடகா அரசு, யார்கோல் எனும் இடத்தில் அணை கட்டியதால், 2 ஆறுகளும் நீரின்றி வறண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.