ADDED : மே 21, 2024 10:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டதிம்மனல்லி பஞ்., முத்தம்பட்டி கிராமத்தில், கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கவில்லை.
ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராயக்கோட்டை போலீசார் மற்றும் அதிகாரிகள் அப்பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனால், பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

