/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சூளகிரி, ஓசூர் பகுதியில் மழை பலத்த காற்றுக்கு பறந்த வீட்டின் மேற்கூரைகள்
/
சூளகிரி, ஓசூர் பகுதியில் மழை பலத்த காற்றுக்கு பறந்த வீட்டின் மேற்கூரைகள்
சூளகிரி, ஓசூர் பகுதியில் மழை பலத்த காற்றுக்கு பறந்த வீட்டின் மேற்கூரைகள்
சூளகிரி, ஓசூர் பகுதியில் மழை பலத்த காற்றுக்கு பறந்த வீட்டின் மேற்கூரைகள்
ADDED : மே 04, 2024 09:49 AM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், ஒமதேப்பள்ளி பகுதியில் மா மரத்தில் இருந்த மாங்காய்கள் உதிர்ந்து விழுந்தன. தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக, சூளகிரி சுற்றுப்புற பகுதிகளில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்தது.
பேரிகை சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மதிய நேரத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், அத்திமுகம் அடுத்த வெங்கடேஷ்புரம் பஞ்., உட்பட்ட உஸ்தனப்பள்ளி கிராமத்தில், 4 மாட்டு கொட்டகை மற்றும் இரு வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. சூளகிரி தாசில்தார் சக்திவேல் மற்றும் வருவாய்த்துறையினர், சேதமான வீடுகளின் விபரங்களை சேகரித்தனர்.அதிர்ஷ்டவசமாக மக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சூளகிரி அடுத்த ஒமதேப்பள்ளியில், ஹரிஸ் என்பவரது தோட்டத்தில் பீர்க்கங்காய் மற்றும் அதன் செடிகள் சேதமாகின.
ஓசூர் பகுதியில் நேற்று மதியம், 1:30 மணிக்கு சாரல் மழை பெய்தது. சூளகிரி, ஓசூர் பகுதியில் கடும் வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில், நேற்று இரண்டாவது நாளாக மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் குறைந்தது. நேற்று மதியத்திற்கு பின் வெயில் தென்படாமல் குளிர்ந்த காலநிலை நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழை காரணமாக சில இடங்களில் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.