/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.3.50 கோடி செம்மரக்கட்டை பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டியவருக்கு வலை

ADDED : பிப் 27, 2025 01:22 AM
ஓசூர்:பாகலுார் அருகே, 3.50 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், ஒரு கோடி ரூபாயில் வீடு கட்டி, சொகுசாக வாழ்ந்த புரோக்கரை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே, கூசனப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜு, 43. பாகூர் ஜங்ஷன் பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
இவரது வீட்டின் பின்புறம், செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த 715 கிலோ செம்மரக் கட்டைகளை போலீசார் கைப்பற்றினர். அவற்றை, ஆந்திர வனப்பகுதியில் வெட்டி, கடத்தி வந்ததும் தெரிந்தது.
உள்ளூர் சந்தையில், 35 லட்சம் ரூபாயும், சர்வதேச சந்தையில், 3.50 கோடி ரூபாய் வரை விலை போகும் எனவும் தெரிந்தது. போலீசார் சோதனை செய்வதை அறிந்த ராஜு தலைமறைவாகி விட்டார்.
செம்மரக்கட்டை கடத்தலில், புரோக்கர் போல செயல்பட்ட அவருக்கு பின்னால், பெரிய புள்ளிகள் பலர் இருப்பதாகவும், கூசனப்பள்ளியில் அவர், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், சொகுசு வீடு கட்டியதும் தெரிய வந்துள்ளது.