/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பா.ஜ., சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
/
பா.ஜ., சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
ADDED : ஜூலை 28, 2024 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி, ஓசூர் அருகே தின்னுாரில் உள்ள தனியார் பள்ளியில், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில், மாணவ, மாணவியர் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவ, மாணவியருக்கு அப்-துல்கலாம் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்து எடுத்-துரைக்கப்பட்டது. தொடர்ந்து மக்களுக்கு இலவசமாக, 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மாவட்ட துணைத்
தலைவர் முருகன், பொருளாளர் சீனிவாசன், செயலாளர் ராஜ-சேகர், மாநகர தலைவர்கள் ரமேஷ், நாகேந்திரா உட்பட பலர் பங்கேற்றனர்.