/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் பிரம்மோற்சவத்தில் சயன உற்சவம்
/
லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் பிரம்மோற்சவத்தில் சயன உற்சவம்
லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் பிரம்மோற்சவத்தில் சயன உற்சவம்
லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் பிரம்மோற்சவத்தில் சயன உற்சவம்
ADDED : மே 28, 2024 09:06 AM
கிருஷ்ணகிரி: லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில், 38வது ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி, சயன உற்சவ ஊர்வலம் நடந்தது.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 38வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த, 15ல் துவங்கியது. 16ல் அன்னபட்சி வாகனம், 17ல், சிம்ம வாகனம், 18ல், ஆஞ்சநேயர் வாகனம், 19ல் சேஷ வாகனம், 20ல், திருக்கல்யாணமும், இரவு கருட வாகனத்திலும், 21ல் நரசிம்ம ஜெயந்தியும், இரவு யானை வாகனத்திலும், நரசிம்மர் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, 22 காலை, ரதாரோஹணம் ரதோற்சவம், 23 காலை அபிஷேகம், பிரகார உற்சவமும், இரவு குதிரை வாகனத்தில் நகர்வலம், 24 காலை, சூரிய பிரபா வாகனத்தில் நகர் வலம், இரவு சந்திர பிரபா வாகனத்தில் நகர் வலம் நடந்தது.
25 காலை, வசந்த உற்சவம், நகர் வலம், துவஜா அவரோஹனம், அவபிரதஸ்தானம், மூக்குபலியும், இரவு புஷ்ப பல்லக்கில் நகர் வலமும் நடந்தது. 26 காலை, அபிஷேகம், பிரகார உற்சவம், இரவு துவாதச சாத்துமுறை சேவை, இரவு சயன உற்சவ ஊர்வலமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (மே 28) காலை, 108 சங்காபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடக்க உள்ளது.