ADDED : ஏப் 23, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி சிப்பாய்பாளையத்தை சேர்ந்தவர் சையத்வாசிம் மனைவி பர்ஷானா தாஜ், 30; இவர் மகள் அபியா, 7; அப்பகுதியிலுள்ள அரசு உருது பள்ளியில், 3ம் வகுப்பு படித்து வந்தார். கணவர் இறந்த நிலையில், மகள் அபியாவை தாய் பர்ஷானா தாஜ் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் தண்டரை ஏரிக்கு, பக்கத்து வீட்டை சேர்ந்த குடும்பத்தினர் குளிக்கச் சென்றனர். அபியாவும் அவர்களுடன் சென்றார்.
ஏரியில் குளித்து விட்டு மதிய உணவு சாப்பிட்ட பின், இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறி, மாணவி அபியா சென்றார். நீண்ட நேரமாக அவர் திரும்பாததால், ஏரியில் தேடியபோது அங்கு சடலமாக மிதந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணையில், கால் கழுவ சென்ற போது, அபியா ஏரியில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது.

