/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சுயவேலை வாய்ப்பு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
/
சுயவேலை வாய்ப்பு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
சுயவேலை வாய்ப்பு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
சுயவேலை வாய்ப்பு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
ADDED : செப் 16, 2024 02:37 AM
கிருஷ்ணகிரி: இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது.
இங்கு, வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஆண், பெண்களுக்கு இலவசமாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தற்போது இங்கு, 10 நாட்கள் கறவை மாடு வளர்ப்பு மற்றும் மண் புழு உரம் தயாரிப்பு குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த, 35 பெண்கள் பயிற்சி பெற்றனர்.
பயிற்சி முடித்த பெண்களுக்கு மத்திய அரசின், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் (இந்தியன் வங்கி) சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் உதவி திட்ட அலுவலர் பழனி, பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். காவேரிப்பட்டணம் இந்தியன் வங்கி கிளை மேலாளர் சிவபாரத் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்
பிறைசூடன் நடராஜ் நன்றி கூறினார்.