/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வயநாடு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அனுப்பி வைப்பு
/
வயநாடு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அனுப்பி வைப்பு
வயநாடு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அனுப்பி வைப்பு
வயநாடு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அனுப்பி வைப்பு
ADDED : ஆக 11, 2024 03:32 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்-நிலைப் பள்ளியில் இருந்து, வயநாடு பகுதி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர், பி.டி.ஏ., தலைவர் அமானுல்லா முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, வயநாடு பகுதி மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை, கிருஷ்ணகிரி மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் சபாஷ்டியனப்பன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் குணசேகரன், ஊத்தங்கரை ரெட் கிராஸ் கிளை பொறுப்பாளர்கள் தேவராசு, அரிமா சங்க தலைவர் ராஜா, செல்வம், ரஜினிசங்கர், சிவகிரி, முனியப்பன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். ஆசிரி-யர்கள் உமா மகேஸ்வரி, ஸ்ரீ பத்மா, பிரீத்தா, ராசா, வேடியப்பன், பலராமன், ராணி, ராஜேஸ்வரி, பூங்கொடி, மேகநாதன், ஆண்கள் பள்ளி ஜே.ஆர்.சி., மாணவர்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாண-விகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஜே.ஆர்.சி., ஆசிரியர் கணேசன் செய்திருந்தார்.

