/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல் சாக்கடை துார்வாரும் பணி துவக்கம்
/
காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல் சாக்கடை துார்வாரும் பணி துவக்கம்
காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல் சாக்கடை துார்வாரும் பணி துவக்கம்
காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல் சாக்கடை துார்வாரும் பணி துவக்கம்
ADDED : ஜூன் 22, 2024 02:49 AM
கிருஷ்ணகிரி:காவேரிப்பட்டணம்
டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில், சாக்கடை கால்வாய் துார்வாரும்
பணியை டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி
மாவட்டம், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல், 30 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். காவேரிப்பட்டணத்தில் மழை
காலங்களில் சேலம் மெயின்ரோடு, நான்குரோடு சந்திப்பு, கொசமேடு
உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர், சாக்கடை நீருடன் கலந்து சாலைகளில்
தேங்குவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த சில தினங்களாக பெய்து வரும்
மழையாலும், சாக்கடை கால்வாய்களில் அடைப்பாலும் சாலைகளில் மழைநீர்,
கழிவுநீருடன் கலந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து பொதுமக்கள்,
டவுன் பஞ்., நிர்வாகத்திடம் புகாரளித்தனர்.
இதையடுத்து, நேற்று
காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமார்
சாக்கடை கழிவுநீர் கால்வாயை துார்வாரும் பணியை துவக்கி வைத்தார். டவுன்
பஞ்.,ன் முக்கிய பகுதியான சேலம் மெயின் ரோட்டில் பொக்லைன் மூலம்,
சாக்கடை கால்வாய்கள் துார்வாரும் பணியும், ஆக்கிரமிப்புகளை
அகற்றும் பணியும் துவங்கியுள்ளது. மொத்தமுள்ள, 15 வார்டுகளிலும்
சாக்கடைகால்வாய் துார்வாரப்பட்டு, ஆக்கிரமிப்புகளும்
அகற்றப்படுகிறது.
காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., செயல் அலுவலர் கீதா, டவுன் பஞ்., வார்டு உறுப்பினர்கள்,
துப்புரவு பணியாளர்கள் உடனிருந்தனர்.