sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பள்ளிகளில் சிறப்பு வகுப்பு, பயிற்சி நடத்த கூடாது; கலெக்டர் உத்தரவு

/

பள்ளிகளில் சிறப்பு வகுப்பு, பயிற்சி நடத்த கூடாது; கலெக்டர் உத்தரவு

பள்ளிகளில் சிறப்பு வகுப்பு, பயிற்சி நடத்த கூடாது; கலெக்டர் உத்தரவு

பள்ளிகளில் சிறப்பு வகுப்பு, பயிற்சி நடத்த கூடாது; கலெக்டர் உத்தரவு


ADDED : மே 12, 2024 12:03 PM

Google News

ADDED : மே 12, 2024 12:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும், சிறப்பு வகுப்புகள், பயிற்சிகள் நடத்த கூடாது என, மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அதிகபட்ச வெப்பநிலை ஏப்., மாத இறுதியில் இருப்பதை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகி உள்ளது. மேலும் மே மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், 36 - 40 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என, இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும், சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் ஏதும் நடத்தடக்கூடாது. தவறும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளின் மீது, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்களது அவசர தேவைகளுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 1077, 04343 - 234444, மாவட்ட காவல் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்: 94981 81214 மற்றும் தீயணைப்புத்துறை கட்டுப்பாடடு அறை எண்: 101ஐ அழைத்து தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us