/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநில அளவிலான சிலம்பம்: வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
/
மாநில அளவிலான சிலம்பம்: வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
மாநில அளவிலான சிலம்பம்: வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
மாநில அளவிலான சிலம்பம்: வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 18, 2024 01:28 AM
கிருஷ்ணகிரி: மாநில அலவிலான சிலம்பம் போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சேலம் புனித பால் மேல்நிலைப்பள்ளியில், சிலம்பொலி கலை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில், மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தன. அறக்கட்டளை தலைவர் ரத்தினகுமார் துவக்கி வைத்தார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், 500 பேர் பங்கேற்றனர். தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க, சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில், 160 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், தனித்திறன் போட்டியில், 42 மாணவ, மாணவியர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட சிலம்பாட்ட கழக செயலர் பவுன்ராஜ், பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். மேலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த சூர்யா, சதாசிவம் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுரி சங்கர் ஆகியோருக்கு பாராட்டு
தெரிவிக்கப்பட்டது.

