/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 01, 2025 03:51 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட, ஏ.ஐ.டி.யு.சி.,யின் தெரு வியாபார தொழி-லாளர் சங்கம் சார்பில், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தெருவோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார். தலைவர் முபாரக் முன்னிலை வகித்தார். இ.கம்யூ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லகுமையா, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் மாதையன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில், தெரு வியாபா-ரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். தற்-போது வியாபாரம் செய்யும் இடங்களிலிருந்து, தெரு வியாபாரி-களை வெளியேற்ற கூடாது. அனைத்து தெரு வியாபாரிகளுக்கும் வியாபார சான்று, ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்க வேண்டும். தெருவோர வியாபாரிகளிடம், மாநகராட்சி நிர்வாகம் கூறியும் சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.ஓசூர் மாநகர தலைவர் சின்னசாமி, செயலாளர் பாஸ்கரரெட்டி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ஆதில், ஓசூர் மாநகர துணை செயலாளர் நுாரு உட்பட பலர் பங்-கேற்றனர்.