ADDED : மே 28, 2024 08:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாளம் பஞ்., ஜெயபுரம் புதுார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகள் பிரத்திகா, 15; பெட்டமுகிலாளம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மதியம் அப்பகுதியிலுள்ள அண்ணாதுரை என்பவரது விவசாய கிணற்றில், மண் சரிந்ததில், மாணவி பிரத்திகா கிணற்றின் உள்ளே விழுந்து நீரில் மூழ்கி பலியானார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.