/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோவில் பூட்டை உடைத்து பூஜை பொருட்கள் திருட்டு
/
கோவில் பூட்டை உடைத்து பூஜை பொருட்கள் திருட்டு
ADDED : மே 19, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: பேரிகை அடுத்த அத்திமுகத்தை சேர்ந்தவர் வேணுகோபால், 59.
இவர், அதே பகுதியில் உள்ள இரவகேஸ்வரர் கோவிலில் பூசாரியாக உள்ளார். கடந்த, 16, இரவு வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை திறக்க சென்றபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பூஜை பொருட்கள் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.

