ADDED : பிப் 24, 2025 03:12 AM
ஓசூர்:ஓசூரிலுள்ள தேன்கனிக்கோட்டை சாலையில், சப் கலெக்டர் அலுவலகம் முன், மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. அதை ஒட்டிய, மாவட்ட அரசு மருத்துவமனை முன்பு, ஏற்கனவே உள்ள பழைய கால்வாய் அகற்றப்பட்டு, புதிய கால்வாய் அமைக்கும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே, அரசு மருத்துவமனை காம்பவுன்ட் சுவர் மோசமான நிலையில் இருந்ததால், பணிகள் நடந்த போது, 50 அடி துாரத்திற்கு காம்பவுன்ட் சுவர் இடித்து, தேன்கனிக்கோட்டை சாலையோரம் விழுந்தது. இதனால் பணிகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
மருத்துவமனை காம்பவுன்ட் சுவரில் தான், மின் கேபிள்கள் பதிக்-கப்பட்டிருந்தன. அதை முன்கூட்டியே அகற்றி இருந்ததால், பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அரசு மருத்துவமனை காம்பவுன்ட் சுவர் இடிந்துள்ளதால், சமூக விரோதிகள் எளிதாக மருத்துவமனைக்குள் நுழைந்து விடும் அபாயம் உள்ளது. அதனால், கால்வாய் பணியுடன் சேர்த்து, காம்பவுன்ட் சுவரையும் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

