/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மண் மாதிரி பரிசோதனை செய்து பயிர் உற்பத்தி அதிகரிக்க யோசனை
/
மண் மாதிரி பரிசோதனை செய்து பயிர் உற்பத்தி அதிகரிக்க யோசனை
மண் மாதிரி பரிசோதனை செய்து பயிர் உற்பத்தி அதிகரிக்க யோசனை
மண் மாதிரி பரிசோதனை செய்து பயிர் உற்பத்தி அதிகரிக்க யோசனை
ADDED : மே 10, 2024 02:38 AM
கிருஷ்ணகிரி;சூளகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஜான் லூர்து தலைமையிலான வேளாண் அலுவலர்கள், சூளகிரி விவசாயிகளிடம், மண் சேகரிப்பு பரிசோதனை குறித்து விளக்கி பேசியதாவது:சூளகிரி வட்டாரத்தில், தற்போது மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் ரசாயன உரங்கள், தேவைக்கேற்ப அதிகமாக உபயோகிப்பதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் வழிவகை செய்யப்படுகிறது. பொதுவாக பயிர் அறுவடைக்கு பின், மண்ணில் ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும். மண் அரிப்பு, நீர் கரையோட்டம் மற்றும் சத்துக்கள் ஆவியாதலால் மண் வளம் குன்றி விடும். எனவே, மண் பரிசோதனை மூலம், மண் வளத்தை அறிந்து கொள்வது அவசியம். மண் மாதிரிகள் எடுப்பதற்கு முன், வயலில் ஏக்கருக்கு குறைந்தது, 7 முதல், 10 இடங்களில் மண் சேகரிக்க வேண்டும். சேகரித்த மண் ஈரமாக இருந்தால் நிழலில் உலர்த்தி அதிலுள்ள வேர், தண்டு, புல், கல் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு சேகரித்த மண்ணை நன்றாக கலந்து அதிலிருந்து அரை கிலோ மண்ணை பரிசோதிக்க வேண்டும். அதன் முடிவில் கிடைக்கும் தீர்வு, வேளாண் அலுவலர்கள் ஆலோசனை படி நடந்தால், பயிர்கள் உற்பத்தியை அதிகப்படுத்த முடியும்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.