ADDED : ஏப் 07, 2024 04:03 AM
சேலம், ஏப். 7-
வாழப்பாடி பகுதிகளில் குடிநீரால் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட நிர்வாக அறிக்கை:
வாழப்பாடி, முத்தம்பட்டி, சோமம்பட்டி, அத்தனுார்பட்டி, செக்கிடிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு ஆத்துார் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும், சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.
ஆய்வு மேற்கொண்டதில், எந்த கசிவு, உடைப்பு இல்லை. இப்பகுதிகளுக்கு செல்லும் பேளூர் பிரிவு தரைமட்ட தொட்டி, சோமம்பட்டி, செக்கடிப்பட்டி பகுதிகளில் குடிநீர் மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்ததில், குடிப்பதற்கு உகந்தது என தெரியவந்துள்ளது. அம்மாபேட்டை முதல் ஆத்துார், இந்திரா நகர் வரை, 34 இடங்களில் நீர் பிரித்தெடுத்து வழங்கப்பட்டு வரும் நிலையில், சில பகுதிகளில் மட்டும் தொற்று ஏற்பட்டுள்ளதால் குடிநீர் மூலம் இத்தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.

