ADDED : ஆக 17, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் மத்திகிரி பொம்மண்டப்பள்ளியை சேர்ந்தவர் அஸ்வத்குமார், 26; தனியார் டிரான்ஸ்போர்ட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த, 13ல் அவர் வீட்டை பூட்டி விட்டு கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார். கடந்த 16ல், திரும்பி வந்த போது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் திருட முயற்சி நடந்தது தெரிந்தது. அஸ்வத் குமார் மத்திகிரி போலீசில் புகார் செய்தார். விசாரணையில் அவரது வீட்டில் திருட முயன்றது அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாகீர் அகமது, 26. என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

