/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மரியாதை
/
தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மரியாதை
தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மரியாதை
தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மரியாதை
ADDED : ஏப் 18, 2024 01:33 AM
அரூர்,அரூரில், கொங்கு வேளாள கவுண்டர்கள் திருமண மண்டபத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன்
சின்னமலையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் சிலைக்கு, தர்மபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கத் தலைவரும், ஊத்தங்கரை வித்யாமந்திர் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான சந்திரசேகரன் தலைமையில், மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், கொ.ம.தே.க., - தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட இடங்களில், பல்வேறு அரசியல் கட்சியினர் தீரன் சின்னமலையின் உருவ படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.