/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளிகளில் அரசு இட ஒதுக்கீடு விண்ணப்பிக்க அவகாசம் வேண்டும்
/
பள்ளிகளில் அரசு இட ஒதுக்கீடு விண்ணப்பிக்க அவகாசம் வேண்டும்
பள்ளிகளில் அரசு இட ஒதுக்கீடு விண்ணப்பிக்க அவகாசம் வேண்டும்
பள்ளிகளில் அரசு இட ஒதுக்கீடு விண்ணப்பிக்க அவகாசம் வேண்டும்
ADDED : மே 25, 2024 02:44 AM
கிருஷ்ணகிரி: தமிழக விவசாயிகள் சங்க, மத்துார் ஒன்றிய செயலாளர் ரவீந்தராசு, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகள், 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் படிக்க விண்ணப்பிக்கும் நாள் கடந்த, 20ம் தேதியுடன் முடிந்தது. அன்றைய தினம் கடைசி நாள் என்பதால், சர்வர் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் பலரும் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஏழை மக்களின் நலன் கருதி மீண்டும் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மேலும் தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் படிக்க மாணவர்கள் வீட்டிலிருந்து, 4 கி.மீ., துாரத்தில் பள்ளி இருக்க வேண்டும் என்ற விதிமுறையையும் மாற்ற வேண்டும். பெரும்பாலும் தனியார் பள்ளிகள் நகரில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ளதால், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, 10 முதல், 15 கி.மீ., துாரத்தில் உள்ள பள்ளிகளிலும் படிக்கும் வகையில் விதியை மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

