/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பைக் ஓட்டிய 3 சிறுவர்களின் தந்தையர் மூவர் அதிரடி கைது
/
பைக் ஓட்டிய 3 சிறுவர்களின் தந்தையர் மூவர் அதிரடி கைது
பைக் ஓட்டிய 3 சிறுவர்களின் தந்தையர் மூவர் அதிரடி கைது
பைக் ஓட்டிய 3 சிறுவர்களின் தந்தையர் மூவர் அதிரடி கைது
ADDED : ஜூன் 13, 2024 02:32 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 18 வயதிற்கு குறைவான சிறுவர்கள், பைக்குகளை ஓட்டுவதும், அதனால், விபத்து ஏற்படுவதும் தொடர்கிறது.
சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால், அவர்களின் பெற்றோருக்கு, புதிய வாகன சட்டப்படி, 25,000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். வாகனம் ஓட்டியவருக்கு, 25 வயது வரை ஓட்டுனர் உரிமம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. இச்சட்டம் ஜூன் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம், ஓசூர் டவுன் போலீசார், ராயக்கோட்டை சாலை அமீரியா ஜங்ஷன் அருகில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்கு, 18 வயது நிரம்பாத, 3 சிறுவர்கள் பைக் ஓட்டிச் சென்றனர். அந்த பைக்குகளை பறிமுதல் செய்து, அவர்களின் தந்தையர் மூவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி., தங்கதுரை கூறுகையில், ''18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்பதை வலியுறுத்தவே, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்டம் முழுதும் பள்ளி, கல்லுாரிகளில் இது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்,'' என்றார்.