/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
5 நாளில் ரூ.19.24 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள், மது பறிமுதல்

ADDED : மார் 24, 2024 01:50 AM
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 5 நாட்களில், 19.24 லட்சம் ரூபாய் மதிப்பிலான, புகையிலை பொருட்கள், மது பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட எஸ்.பி., அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேர்தல் விதிமுறைகள் நடைமுறை படுத்தப்பட்டதை அடுத்து, புகையிலை பொருட்கள், மதுபானங்கள் கடத்தல் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த, 5 நாட்களில், மாவட்டத்தில் புகையிலை விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட, 14 பேர் மீது, 13 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து, 15.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 713 கிலோ புகையிலை பொருட்கள், 2 டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.
அரசு மதுபானங்களை கள்ளத்தனமாக விற்ற, 144 பேர் மீது வழக்குப்பதிந்து, 3.76 லட்சம்- ரூபாய் மதிப்பிலான, 600 லிட்டர் அரசு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் இது போன்ற சட்டவிரோத செயல்கள் பற்றி தகவல் தெரிந்தால், 94981 81214 என்ற மொபைல் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.