/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிராக்டர் கவிழ்ந்து விபத்து; டிரைவர் பலி
/
டிராக்டர் கவிழ்ந்து விபத்து; டிரைவர் பலி
ADDED : ஜூன் 14, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், தேன்கனிக்கோட்டை அருகே கே.ஓசூரை சேர்ந்தவர் சஞ்சு, 23, டிரைவர்; பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
இவர் நேற்று முன்தினம் காலை, 11:00 மணியளவில் கே.ஓசூரில் டிராக்டரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த சஞ்சு உயிரிழந்தார். விபத்து குறித்து, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.