/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டூ - வீலரில் காட்டுப்பன்றி மோதி வியாபாரி பலி
/
டூ - வீலரில் காட்டுப்பன்றி மோதி வியாபாரி பலி
ADDED : மே 30, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் செலபதி, 39. இவர், கர்நாடகா மாநிலம், மாஸ்தி பகுதியில் விளையும் காலி பிளவரை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்தார்.
நேற்று காலை உத்தனப்பள்ளியில் இருந்து மாஸ்தி நோக்கி, 'ஹோண்டா சைன்' பைக்கில், காலிபிளவர் தோட்டத்தை பார்க்க சென்றார். பேரிகை அடுத்த சீக்கனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது சாலை குறுக்கே காட்டுப்பன்றி திடீரென வேகமாக ஓடியது.
அதன் மீது பைக் மோதியதில் கீழே விழுந்து படுகாயமடைந்த செலபதி, சம்பவ இடத்திலேயே பலியானார். காட்டுப்பன்றியும் பைக் மோதிய வேகத்தில் இறந்தது. பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.