/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : மார் 25, 2024 01:05 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
லோக்சபா தொகுதி ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரியும், 9,305
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, ஓட்டுப்பதிவு குறித்து, முதற்கட்ட
தேர்தல் பயிற்சி நடந்தது.
ஊத்தங்கரை அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி, பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும்
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில்,
ஓட்டுசாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி நிலை 1, நிலை-
2, நிலை -3 அலுவலர்கள் ஆகிய அலுவலர்களுக்கு நடக்கும் பயிற்சியை,
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சரயு ஆய்வு செய்தார்.
நேற்று
காலை, 10:00 முதல் மதியம் 1:00 வரை ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள்
மற்றும் நிலை 1 அலுவலர்களுக்கும், மதியம், 2:00 முதல் மாலை, 5:00 மணி
வரை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நிலை -2 மற்றும் நிலை- 3
அலுவலர்களுக்கும், மண்டல அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.
தனி
டி.ஆர்.ஓ., பவநந்தி, மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலர் பெரியசாமி,
உதவி தேர்தல் அலுவலர்கள், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு, மற்றும்
அலுவலர்கள் உடனிருந்தனர்.
* வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில்
மொத்தம், 312 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. லோக்சபா
தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்,
சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், காலை, மதியம் என இரு
பிரிவுகளாக நேற்று நடந்தது.
ஓட்டுப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு
இயக்க வேண்டும் என, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
அளிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சரயு, பயிற்சி முகாமை
பார்வையிட்டார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாராணி மற்றும்
தாசில்தார் சக்திவேல், தனி தாசில்தார் ரமேஷ் பாபு உட்பட பலர்
உடனிருந்தனர்.

