/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின் கம்பி அறுந்து விழுந்து இரண்டு பசு மாடுகள் பலி
/
மின் கம்பி அறுந்து விழுந்து இரண்டு பசு மாடுகள் பலி
மின் கம்பி அறுந்து விழுந்து இரண்டு பசு மாடுகள் பலி
மின் கம்பி அறுந்து விழுந்து இரண்டு பசு மாடுகள் பலி
ADDED : ஆக 11, 2024 03:36 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்-பேட்டை புளியனுார் கிராமத்தை சேர்ந்த வசந்தகுமார், 49, மாமியார் மணியம்மாள், 58, ஆகியோரது இரண்டு கறவை மாடுகள், மாட்டு கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்தன.
அருகில் உயர் மின்னழுத்த மின்கம்பி சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக, தாழ்வாக சென்ற உயர்மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து, இரண்டு பசு மாடுகள் உயிரிழந்தன. இரு கறவை மாடு-களின் மதிப்பு, ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகி-றது. சம்பவ இடத்திற்க்கு வந்த, சிங்காரப்பேட்டை மின் ஊழி-யர்கள் மின் இணைப்பை துண்டித்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர்.