/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி
/
பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி
ADDED : ஏப் 02, 2024 10:49 PM
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கிறிஸ்துபாளையத்தை சேர்ந்தவர் ஸ்டீபன், 25, குளிர்பானங்கள் வினியோகம் செய்பவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த பிரவீன் பால்ராஜ், 25, என்பவரும், சம்பவத்தன்று இரவு, 7:30 மணிக்கு, தளி - தேன்கனிக்கோட்டை சாலையில், 'பஜாஜ் பல்சர்' பைக்கில் சென்றனர். ஸ்டீபன், பைக்கை ஓட்டினார்.
கோட்டை உளிமங்கலம் சில்க்போர்டு அருகே, 'பஜாஜ் பிளாட்டினா' பைக்கில், சீனிவாசபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சஞ்சய், 22, என்பவர் எதிரே வந்தார். முன்னால் சென்ற வாகனத்தை சஞ்சய் முந்தி செல்ல முயன்றபோது, எதிரே ஸ்டீபன் ஓட்டி வந்த பைக் மீது மோதினார். இதில், ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
படுகாயமடைந்த சஞ்சய் மற்றும் பிரவீன் பால்ராஜ் ஆகியோரை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சஞ்சய் உயிரிழந்தார்.

