/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்ச்சாலை கிராம மக்கள் கடும் அவதி
/
போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்ச்சாலை கிராம மக்கள் கடும் அவதி
போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்ச்சாலை கிராம மக்கள் கடும் அவதி
போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்ச்சாலை கிராம மக்கள் கடும் அவதி
ADDED : ஆக 20, 2024 02:41 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி - காவேரிப்பட்டணம் செல்லும் சாலையிலுள்ள டேம்காவாய் பகுதியில் இருந்து மாரிசெட்டிஹள்ளி, ஜெய்னுார் வழியாக பேரூஹள்ளி வரையிலான, 4 கி.மீ., துார தார்ச்சாலை கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. தற்போது குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
அப்பகுதி விவசாயிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர், இந்த பல்லாங்குழி சாலை வழியாக தினமும், பல்வேறு பணிகளுக்கு, 2 சக்கர வாகனம் மற்றும் அரசு டவுன் பஸ் மூலம் சென்று வருகின்றனர். விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச்செல்லும் போதும், மக்கள் மருத்துவமனைக்கு செல்வதிலும் மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கு லாயக்கற்ற பல்லாங்குழி சாலையை சரி செய்து, புதிய தார்ச்சாலை அமைத்து தர, அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, மாரிசெட்டிஹள்ளியை சேர்ந்த பி.வேலாயுதம், 40, கூறுகையில், ''மழைக்காலங்களில் குண்டும், குழியுமான இச்சாலையில் ஆங்காங்கே மழை தண்ணீர் தேங்குவதால், டூவீலரில் செல்வோர் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்,'' என்றார்.
மாரிசெட்டிஹள்ளியை சேர்ந்த கே.அருள்நிதி, 46, கூறுகையில், ''இப்பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியூர் செல்ல, இந்த குண்டும், குழியுமான சாலையால் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அதேபோல் பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் இந்த பல்லாங்குழி சாலையை சரிசெய்து, விரைவில் தார்ச்சாலை அமைத்து தர வேண்டும், என்றார்.