/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு பாதுகாப்பு அறைகளில் வைத்து 'சீல்'
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு பாதுகாப்பு அறைகளில் வைத்து 'சீல்'
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு பாதுகாப்பு அறைகளில் வைத்து 'சீல்'
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு பாதுகாப்பு அறைகளில் வைத்து 'சீல்'
ADDED : மார் 24, 2024 01:50 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள பாதுகாப்பு அறையில், ஓசூர், தளி, ஊத்தங்கரை, பர்கூர், வேப்பனஹள்ளி ஆகிய, 6 சட்டசபை தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பேலட் யூனிட் மற்றும் வி.வி., பேட் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. லோக்சபா தேர்தலை முன்னிட்டு வரும், 19 ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளதால், அந்தந்த தொகுதிகளுக்கு லாரிகளில் பாதுகாப்பாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பேலட் யூனிட்கள் மற்றும் வி.வி., பேட் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. ஓசூர் சட்டசபை தொகுதிக்கு, 461 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 461 பேலட் யூனிட்கள் மற்றும் 499 வி.வி., பேட் ஆகியவை, ஓசூர் அரசு கலை அறிவியல் கல்லுாரிக்கு நேற்று வந்தடைந்தன.
அவற்றை, ஓசூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியங்கா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், கல்லுாரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து, 'சீல்' வைக்கப்பட்டது. அந்த அறைக்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல், தளி சட்டசபை தொகுதிக்கு, 366 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 366 பேலட் யூனிட்கள் மற்றும் 396 வி.வி., பேட் ஆகியவை, தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரன் மற்றும் அரசியல் கட்சிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைத்து, 'சீல்' வைக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

