/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8,000 கன அடியாக சரிவு
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8,000 கன அடியாக சரிவு
ADDED : ஆக 08, 2024 01:53 AM
ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 8,000 கன அடியாக சரிந்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால், கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பி, நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை பாதுகாப்பு கருதி, காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 2,729 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 5,346 கன அடி என, மொத்தம், 8,075 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வினாடிக்கு, 17,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு, 8,000 கன அடியாக சரிந்தது.
ஒகேனக்கல் காவிரியாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கின் போது, சேதமான மெயின் பால்ஸ், நடைப்பாதை, பெண்கள் குளிக்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளை பென்னாகரம் பி.டி.ஓ., சுருளிராஜன், ஷகிலா, பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து நேற்று, 23 வது நாளாக
காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை உள்ள நிலையில், நீர்வரத்து சரிந்ததால், பரிசல் இயக்கும் இடத்தையும், அதிகாரிகள் பார்வையிட்டு சென்றனர்.