/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் ராஜிவ் ஜோதி யாத்திரைக்கு வரவேற்பு
/
ஓசூரில் ராஜிவ் ஜோதி யாத்திரைக்கு வரவேற்பு
ADDED : ஆக 11, 2024 03:33 AM
ஓசூர்: சென்னை அருகே ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, டில்லிக்கு மறைந்த முன்னாள் பிர-தமர் ராஜிவ் ஜோதி யாத்திரை செல்கிறது.
தமிழக எல்லையான ஓசூருக்கு நேற்று முன்தினம் மாலை வந்த ஜோதி யாத்திரைக்கு, மாநகர காங்., தலைவர் தியாகராஜன் தலை-மையில், சீத்தாராம்மேடு பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து, ராயக்கோட்டை சாலை வழியாக, ஓசூர் எம்.ஜி., ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு ஜோதி யாத்திரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
அங்கு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்-பட்டது. பின்னர், கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை சென்று ராஜிவ் ஜோதி வழியனுப்பி வைக்கப்பட்டது. ராஜிவ் ஜோதி யாத்திரை வரும், 20ல் டில்லி சென்றடைகிறது.