/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு எப்போது?
/
கே.ஆர்.பி., அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு எப்போது?
கே.ஆர்.பி., அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு எப்போது?
கே.ஆர்.பி., அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு எப்போது?
ADDED : ஜூன் 16, 2024 01:09 PM
கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணையில் இருந்து, முதல்போக சாகுபடிக்கு எப்போது தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து, ஆண்டுக்கு இரண்டு முறை பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி, முதல் போக பாசனத்திற்கு ஜூலை மாதத்திலும், இரண்டாம் போகத்திற்காக டிசம்பர் மாதத்திலும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதாலும், மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதாலும், வழக்கம்போல் ஜூலை மாத இறுதிக்குள் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
அதே போல், கே.ஆர்.பி., அணையின் நீர்மட்டம், 48 அடியை எட்டினால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். தற்போது அணை நீர்மட்டம், 46 அடியை தாண்டியுள்ளதாலும், அணைக்கு வினாடிக்கு, 269 கன அடிநீர் வந்து கொண்டிருப்பதாலும் விரைவில் அணையின் நீர்மட்டம், 48 அடியை எட்ட வாய்ப்புள்ளது. இரண்டாம் போக சாகுபடி முடிந்து ஒரு மாதம் கடந்துள்ளதால், தற்போது முதல்போக சாகுபடிக்கான பணிகளை துவக்க விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர். இதனால் அணையில் இருந்து, முதல்போக சாகுபடிக்கு எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
முன்னதாக, பாரூர் பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், முதலில் இந்த ஏரியில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.