/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துரோகத்தை பற்றி யார் பேசுவது? இ.பி.எஸ்.,க்கு அன்புமணி பதிலடி
/
துரோகத்தை பற்றி யார் பேசுவது? இ.பி.எஸ்.,க்கு அன்புமணி பதிலடி
துரோகத்தை பற்றி யார் பேசுவது? இ.பி.எஸ்.,க்கு அன்புமணி பதிலடி
துரோகத்தை பற்றி யார் பேசுவது? இ.பி.எஸ்.,க்கு அன்புமணி பதிலடி
ADDED : ஏப் 05, 2024 06:14 AM

கிருஷ்ணகிரி : ''இ.பி.எஸ்., நம்மை பார்த்து துரோகம் செய்து விட்டனர் என்கிறார். துரோகத்தை பற்றி யார் பேசுவது. தன்னை துாக்கி நிறுத்தியவர்கள், வழி நடத்தியவர்கள் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் துரோகம் செய்தது யார்?'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
பா.ஜ., கூட்டணியில், கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து, கிருஷ்ணகிரியில் அவர் பேசியதாவது:
தொலைநோக்கு சிந்தனையுடன் பா.ம.க., தற்போது கூட்டணி அமைத்துள்ளது. பா.ம.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பது புதிதல்ல. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில், 6 ஆண்டுகள், பா.ஜ.,வுடன், பா.ம.க., கூட்டணி வைத்தது.
அப்போது, தி.மு.க.,வும், 5 ஆண்டுகள் அதே கூட்டணியில் தான் இருந்தது. அதை மறந்து ஸ்டாலின் பேசுகிறார். கடந்த, 2014, 2019, 2021 தேர்தல்களிலும், பா.ஜ.,வுடன் இணைந்து தான், பா.ம.க., தேர்தலை சந்தித்தது.
தமிழகத்தில், 57 ஆண்டுகளாக, தி.மு.க,.வும், அ.தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சி அமைத்தது போதும் என்று தான், தற்போது இதே கூட்டணியில் தொடர்கிறோம்.
இ.பி.எஸ்., நம்மை பார்த்து துரோகம் செய்து விட்டனர் என்கிறார். துரோகத்தை பற்றி யார் பேசுவது? தன்னை துாக்கி நிறுத்தியவர்கள், வழி நடத்தியவர்கள் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் துரோகம் செய்தது யார்?
பிரதமர் மோடி, ஓ.பி.சி., சமூகத்தினருக்கு தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கான அரசியல் சாசன அந்தஸ்து பெற்று தந்தார். சேலம் பொதுக்கூட்டத்திற்கு மோடி வந்த போது, நம் தலைவர் ராமதாசை கட்டி தழுவினார்.
எங்களுக்குள் அந்த நட்பு உள்ளது. அதை வைத்து, தமிழகத்தக்கு நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும்.
ஆனால், தி.மு.க., அரசு, மத்திய அரசுடன் மோதல் போக்கை பின்பற்றுகிறது. அரசியல் மேடைகளில் கருத்து ரீதியாக பேசுவதை தவிர்த்து, அநாகரிமாக, சரியான அணுகுமுறை இல்லாமல் பேசி வருகின்றனர்.
வரும் 2026ல், தி.மு.க., - அ.தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சி உருவாகும் வகையில், தொலைநோக்கு கூட்டணி வைத்துள்ளோம். இது நிச்சயம் வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

