/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பொழிவு
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பொழிவு
ADDED : ஆக 11, 2024 03:30 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
பகலில் வெப்பத்தின் தாக்கம் இருந்தாலும், மாலை, இரவு நேரங்-களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, ஓசூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது. குறிப்பாக போச்சம்பள்ளி, மத்துார், கண்ணன்டஅள்ளி, கொட-மாண்டப்பட்டி, வலிப்பட்டி, சிவம்பட்டி, ஊத்தங்கரை, பாம்-பாறு உள்ளிட்ட பகுதிகளில், மூன்று மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் மழை பெய்தது. இப்பகுதியில் தாழ்வான பகுதி-களில் மழைநீர் புகுந்ததால், மக்கள் அவதியுற்றனர்.
நேற்று காலை 7 மணி நிலவரப்படி பெணுகொண்டாபுரத்தில் அதிகபட்சமாக, 105.2 மி.மீ. மழை பெய்தது. ஊத்தங்கரை, 100.2, நெடுங்கல், 86.4, பாம்பாறு அணை, 65, போச்சம்-பள்ளி, 64, பாரூர், 62.8, கிருஷ்ணகிரி அணை, 37.8, ராயக்-கோட்டை, 20, ஓசூர், 18, தளி, கெலவரப்பள்ளி அணை தலா, 15, தேன்கனிக்கோட்டை, 8, சூளகிரி, 6, கிருஷ்ணகிரி, அஞ்-செட்டி, சின்னாறு அணை தலா, 5 மி.மீ., மழை பதிவாகி இருந்-தது,

