/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்
/
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்
ADDED : ஏப் 04, 2024 05:01 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பஞ்., உட்பட்ட கோட்டை தெருவில், 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன், சூளகிரி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பி.டி.ஓ.,க்கள் செல்லகண்ணாள், முருகன் மற்றும் துணை பி.டி.ஓ., ஜேம்ஸ், வி.ஏ.ஓ., அகிலன் மற்றும் போலீசார், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 6.95 லட்சம் ரூபாய் மதிப்பில், கிருஷ்ணாபாளையத்தில் ஆழ்துளை கிணறு தோண்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பால் பணி மேற்கொள்ளப்படவில்லை. எனவே, சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால், பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து
சென்றனர்.