/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவியை பாலியல் பலாத்கார முயற்சி போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
/
மாணவியை பாலியல் பலாத்கார முயற்சி போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
மாணவியை பாலியல் பலாத்கார முயற்சி போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
மாணவியை பாலியல் பலாத்கார முயற்சி போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
ADDED : ஜூலை 02, 2024 10:59 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் பிரேம்குமார், 25, கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 28 ல், அரசு பள்ளியில், 2ம் வகுப்பு படிக்கும், 7 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். மாணவி தப்பிக்க முயன்ற நிலையில், வலது கையை உடைந்துள்ளார். இதையறிந்த மாணவியின் பெற்றோர், பிரேம்குமாரிடம் விசாரித்தபோது, மாணவி தவறி விழுந்து கை உடைந்து விட்டதாக தெரிவித்தார்.
தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் மாணவியை அனுமதித்தனர். பெற்றோர் மற்றும் போலீசார் மாணவியிடம் விசாரித்தபோது, பிரேம்குமார் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், கையை உடைத்ததும் தெரியவந்தது. தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் பிரேம்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.