/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொழிலாளி அடித்து கொலை: உறவினருக்கு போலீஸ் வலை
/
தொழிலாளி அடித்து கொலை: உறவினருக்கு போலீஸ் வலை
ADDED : ஜூன் 06, 2024 04:05 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மரிமானப்பள்ளி இருளர் காலனியை சேர்ந்தவர் முத்து, 28, கூலித்தொழிலாளி; அதே பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 30; இருவரும் உறவினர்கள்.
கடந்த, 2 மாதங்களுக்கு முன்பு சக்திவேல், முத்துவிடம், 700 ரூபாய் கடனாக வாங்கினார். இந்நிலையில் முத்து, தான் கொடுத்த பணத்தை திரும்ப தர கேட்டபோது அவர் மறுத்துள்ளார்.கடந்த, 3 இரவு, முத்து தன் வீட்டின் முன்பு நின்றுள்ளார். அங்கு வந்த சக்திவேல், அவரிடம் தகராறில் ஈடுபட்டு, அருகில் இருந்த கட்டையால் முத்துவை சரமாரியாக தாக்கினார். தடுக்க சென்ற முத்துவின் தந்தை முருகன், 50 மற்றும் உறவினர் ராமு, 28 ஆகியோரையும் தாக்கினார். இதில் படுகாயமடைந்த முத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பர்கூர் போலீசார் தலைமறைவாக உள்ள சக்திவேலை தேடி வருகின்றனர்.