ADDED : ஜூலை 01, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் சானசந்திரம் வ.உ.சி., நகரை சேர்ந்தவர் நஞ்சுண்டசாமி மகன் ஹரிஷ், 19. வெல்டிங் தொழிலாளி; நேற்றிரவு, 7:30 மணிக்கு, சுசூகி ஆக்சஸ் மொபட்டில் தன் நண்பரான அதே பகுதியை சேர்ந்த மோகன், 18, என்பவருடன் ராயக்கோட்டை சாலையில் சென்றார்.
ஓசூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டும் இடத்திற்கு அருகே, சாலையில் எதிர் திசையில் சென்றனர்.
அப்போது கெலமங்கலத்தில் இருந்து ஓசூர் நோக்கி வந்த, 108 அவசர கால ஆம்புலன்ஸ் வாகனமும், மொபட்டும் நேருக்கு நேர் மோதின. இதில் படுகாயமடைந்த ஹரிஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மோகன், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.