/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசியில் சிக்கன் கேட்ட இளைஞர்கள்:கடைக்காரர்களை கொல்ல முயற்சி
/
ஓசியில் சிக்கன் கேட்ட இளைஞர்கள்:கடைக்காரர்களை கொல்ல முயற்சி
ஓசியில் சிக்கன் கேட்ட இளைஞர்கள்:கடைக்காரர்களை கொல்ல முயற்சி
ஓசியில் சிக்கன் கேட்ட இளைஞர்கள்:கடைக்காரர்களை கொல்ல முயற்சி
ADDED : ஜூலை 24, 2024 02:09 AM
ஓசூர்;ஓசூர், பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராஜயோக்கியம், 54; இவர் மனைவி விஜயா, 48; இருவரும், ஓசூர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே சாலையோரம், தள்ளுவண்டி சிக்கன் கடை வைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு கடைக்கு வந்த இருவர் சிக்கன் கேட்டனர். சிக்கனை கொடுத்து விட்டு அவர்களிடம் விஜயா பணம் கேட்டபோது, 'எங்களிடமே பணம் கேட்கிறாயா' என அவர்கள் கூறியதால், சிக்கனை விஜயா திரும்ப எடுத்து சென்றார். ஆத்திரமடைந்த இருவரும், தாங்கள் வந்த மாருதி சென் காரில் ஏறி, பின்புறமாக ஓட்டி வந்து தள்ளுவண்டி கடை மீது, காரை மோதச் செய்தனர். இதில், சிக்கன் பொறித்து கொண்டிருந்த ராஜயோக்கியம், விஜயா மீது சூடான எண்ணெய் கொட்டியது. இதில், ராஜயோக்கியத்திற்கு, 60 சதவீதமும், விஜயாவிற்கு, 20 சதவீதமும் தீக்காயம் ஏற்பட்டது. ஓசூர் அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக ராஜயோக்கியம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஓசூர் டவுன் போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில் அவர்கள், ஓசூர் சானசந்திரம் வி.ஓ.சி., நகரை சேர்ந்த ஜாய்ஸ் ஆல்பர்ட், 28, நவதி ஸ்ரீதேவி நகரை சேர்ந்த கார்மேகம், 38, என தெரிந்தது. இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், காரை பறிமுதல் செய்தனர்.