/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போக்சோவில் சிறை சென்ற வாலிபர்; காதலியுடன் துாக்கிட்டு தற்கொலை
/
போக்சோவில் சிறை சென்ற வாலிபர்; காதலியுடன் துாக்கிட்டு தற்கொலை
போக்சோவில் சிறை சென்ற வாலிபர்; காதலியுடன் துாக்கிட்டு தற்கொலை
போக்சோவில் சிறை சென்ற வாலிபர்; காதலியுடன் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஆக 25, 2024 07:40 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த பச்சப்-பனட்டி, கவுதாளத்தை சேர்ந்த மாரப்பா மகன் நரசிம்மமூர்த்தி, 22; வீட்டின் ஜன்னல்களுக்கு கண்ணாடி பொருத்தும் பணி செய்து வந்தார்.
இவரும், கிருஷ்ணகிரி அரசு கலை கல்லுாரி விடுதியில் தங்கி பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கும், பச்சப்பனட்டியை சேர்ந்த, 17 வயது மாணவியும் ஓராண்டாக காதலித்தனர்.
கடந்த ஜூன், 22ல் மாணவி மாயமான நிலையில், தேன்கனிக்-கோட்டை அனைத்து மகளிர் போலீசில் அவரது தாய் அளித்த புகாரில், நரசிம்மமூர்த்தி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டி-ருந்தார். அதன்படி கடந்த ஜூலை, 2ல் போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
கடந்த, 12ல் ஜாமினில் வந்த நரசிம்மமூர்த்தி, மாணவியுடன் காதலை தொடர்ந்தார். இந்நிலையில் விடுதியில் இருந்து நேற்று முன்தினம் தனது பெற்றோரிடம், ஊருக்கு வருவதாக மாணவி தெரிவித்துள்ளார். ஆனால் வரவில்லை.
நேற்று காலை, 7:00 மணியாகியும் மகன் வெளியே வராததால், ஜன்னலை திறந்து மாரப்பா அறைக்குள் பார்த்தார். வீட்டு கூரையில் வேட்டியில் நரசிம்ம மூர்த்தியும், துப்பட்டாவில் மாண-வியும் துாக்கில் சடலமாக தொங்கினர்.
இருவரும் ஒரே தரப்பை சேர்ந்தவர்கள் என்றாலும், மாணவியின் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதிக்காததால், காதல் ஜோடி தற்-கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று, கெலமங்கலம் போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக காதல் ஜோடி சடலங்களை மீட்ட கெலமங்கலம் போலீசார், உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

