/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலை பணிக்கு பாறையை உடைக்க வைத்த வெடியால் 10 வீடுகள் சேதம்
/
சாலை பணிக்கு பாறையை உடைக்க வைத்த வெடியால் 10 வீடுகள் சேதம்
சாலை பணிக்கு பாறையை உடைக்க வைத்த வெடியால் 10 வீடுகள் சேதம்
சாலை பணிக்கு பாறையை உடைக்க வைத்த வெடியால் 10 வீடுகள் சேதம்
ADDED : டிச 11, 2025 06:25 AM
ஓசூர்: கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழக எல்லையை இணைக்கும் வகையில், சாட்டிலைட் டவுன் ரிங்-ரோடு அமைக்கப்படுகிறது. தமிழக எல்லை கிரா-மங்களில் மட்டும் கிட்டத்தட்ட, 48 கி.மீ., துாரத்-திற்கு இச்சாலை செல்கிறது. இதற்கான பணியில், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்-டுள்ளது.
இந்நிலையில், பேரண்டப்பள்ளி அருகே சாலை பணிக்காக அப்பகுதியில் உள்ள பாறையை உடைக்க அதிக சக்திவாய்ந்த வெடிகளை, நேற்று மதியம் வைத்துள்ளனர். அதனால், பாறைகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி, 500 மீட்டர் துாரம் வரை சென்று விழுந்துள்ளன.
வெடி வைக்கப்பட்ட இடத்திற்கு அருகே உள்ள கொத்துார் கிராமத்தில், 10க்கும் மேற்பட்ட வீடுகள் மீது கற்கள் விழுந்ததால் சேதமடைந்-தன. அந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறை-வாக இருந்ததால், உயிர் சேதம் ஏற்படவில்லை.
5 பேர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பாறை-களை உடைக்கும் பகுதிக்கு சென்று பணிகளை நிறுத்தி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, அங்கி-ருந்த ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதுபோன்று அடிக்கடி வெடி வைப்பதால்,
பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர். ஹட்கோ போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

