sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அதிகாரிகள் கண்டுகொள்ளாத உயர்கோபுர மின்கம்பம்

/

அதிகாரிகள் கண்டுகொள்ளாத உயர்கோபுர மின்கம்பம்

அதிகாரிகள் கண்டுகொள்ளாத உயர்கோபுர மின்கம்பம்

அதிகாரிகள் கண்டுகொள்ளாத உயர்கோபுர மின்கம்பம்


ADDED : டிச 11, 2025 06:24 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கடந்த, 7 மாதங்களாக சரி செய்யாத உயர்கோபுர மின்கம்பத்தின் அருகே, சிலர் தீ வைப்பதால், கம்பம் மேலும் சேதம-டைந்து வருகிறது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலையை சுற்றிலும் நான்கு சாலை செல்கிறது. இங்கு கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்-துறை சார்பில், உயர்மின் கோபுர மின்விளக்கு அமைத்தனர். கடந்த மே, 1ம் தேதி மாலை, பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், இந்த உயர்கோபுர மின்கோபுர விளக்கு சாலையில் சாய்ந்தது. இக்கம்பத்தை அருகி-லுள்ள தர்மராஜா கோவில் சாலையோரம் கிடத்தி விட்டுச் சென்றனர். தற்போது, 7 மாதங்கள் கடந்தும் இதுவரை இந்த உயர் கோபுர மின்விளக்கை சீரமைக்கவில்லை.

கடந்த மாதம் இக்கம்பத்தில் இருந்த மின்வி-ளக்கை அகற்றிய நிலையில், மின்கம்பம் மட்டும் சாலையோரம் கிடத்தப்பட்டுள்ளதால், அதன்மீது பொதுமக்கள் சிறுநீர் கழித்து வருகின்றனர். தற்-போது, கம்பத்தின் அருகில் உள்ள குப்பைக்கு தீ வைப்பதால் கம்பம், மேலும் சேதமடைந்து வரு-கிறது. இதனால் மக்களின் வரிப்பணம், வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில், இந்த உயர்மின் கோபுர விளக்கை, சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us